Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 1-1 என சமநிலையானது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வென்றிருந்த நிலையில், கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது டெஸ்டை நியூசிலாந்து இனிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வென்றதன் மூலம் 1-1 என தொடர் சமநிலையானது.
அந்தவகையில், இத்தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில், இலங்கையும், நியூசிலாந்தும் தலா 60 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 244/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 109, திமுத் கருணாரத்ன 65, குசல் மென்டிஸ் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 4/63, ட்ரெண்ட் போல்ட் 3/75, வில் சோமர்வில் 1/20, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, அஜாஸ் பட்டேல் 1/48)
நியூசிலாந்து: 431/6 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 154, பி.ஜெ வட்லிங் ஆ.இ 105, கொலின் டி கிரான்ட்ஹொம் 83, டிம் செளதி ஆ.இ 24, றொஸ் டெய்லர் 23, கேன் வில்லியம்சன் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 3/114, லசித் எம்புல்தெனிய 2/156, லஹிரு குமார 1/115)
இலங்கை: 122/10 (துடுப்பாட்டம்: நிரோஷன் டிக்வெல்ல 51, திமுத கருணாரத்ன 21, குசல் மென்டிஸ் 20, சுரங்க லக்மால் 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 2/17, டிம் செளதி 2/15, அஜாஸ் பட்டேல் 2/31, வில் சோமர்வில் 2/49)
போட்டியின் நாயகன்: டொம் லேதம்
தொடரின் நாயகன்: பி.ஜெ வட்லிங்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
32 minute ago
04 Jul 2025