Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்த தென்னாபிரிக்கா, பல்லேகலயில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்தே, இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கையிலேயே 3-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றீஸா ஹென்ட்றிக்ஸ் 102 (89), ஜெ.பி டுமினி 92 (70), ஹஷிம் அம்லா 59 (59), டேவிட் மில்லர் 51 (47), அன்டிலி பெக்லுவாயோ ஆட்டமிழக்காமல் 24 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், திஸர பெரேரா 4, லஹிரு குமார 2, அகில தனஞ்சய ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 364 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 45.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று 78 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா 84 (66), அகில தனஞ்சய 37 (42), அஞ்சலோ மத்தியூஸ் 32 (42), குசல் மென்டிஸ் 31 (34) குசல் பெரேரா 27 (17) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லுங்கி என்கிடி 4, அன்டிலி பெக்லுவாயோ 3, தப்ரையாஸ் ஷம்சி 2, வியான் முல்டர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக றீஸா ஹென்ட்றிக்ஸ் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago