2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இலங்கையணியில் யாழ். மத்தி வீரர்

Editorial   / 2018 ஜூலை 24 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரில், ஹம்பாந்தோட்டையில் இன்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கையணியில் விளையாடியுள்ளார்.

குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் அனுஜ் றாவட் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணி, 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது முதலாவது விக்கெட்டாக அனுஜ் றாவட்டின் விக்கெட்டை இழந்தபோதும் அதன்பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அதர்வா டைடே, பவன் ஷா ஆகியோர் வேகமாக ஓட்டங்களைப் பெற இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை விரைவாக உயர்ந்தது.

இந்நிலையில், அதர்வா டைசேயும், பவன் ஷாவும் தமக்கிடையே 263 ஓட்டங்களைப் பகர்ந்திருந்த நிலையில், அதர்வா டைடேயின் விக்கெட்டைக் கைப்பற்றி இவர்களின் இணைப்பாட்டத்தை வியாஸ்காந்த் பிரித்திருந்தார்.

அந்தவகையில், தொடர்ந்து தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா, நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 428 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பவன் ஷான் 177 ஓட்டங்களுடனும் நெஹால் வட்ஹெரா ஐந்து ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். அதர்வா டைடே 177, அர்யன் ஜுயல் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், வியாஸ்காந்த், கல்கர சேனாரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X