Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 ஒக்டோபர் 16 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்டாவது டி20 உலகக்கிண்ண தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று கோலாகமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் பலப்பரீசை நடத்தின. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய நமீபியா அணியின் மைக்கேல் மற்றும் திவான் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
லோப்டி ஈட்டன் பொறுப்புடன் விளையாடி 12 பந்தில் 20 ஓட்டங்கள் சேர்க்க, பவர்பிளே முடிவில் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை நமிபியா அணி இழந்தது. நடுவரிசையில் ஸ்டிபன் பார்ட் மற்றும் அணித்தலைவர் எராஸ்மஸ் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். ஸ்டிபன் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பெரிய ஷாட் அடிக்க முயன்று எராஸ்மஸ் 20 ஓட்டங்களில் வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் நமிபியா அணி 96 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், அப்போது களத்துக்கு வந்த ஜென் ஃப்ரைலிங் மற்றும் ஜேஜே ஸ்மிட் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பவுண்டரிகள் மற்றும் சிக்சராக மாற்றி இலங்கை வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
சிறப்பாக விளையாடிய ஃப்ரைலிங்க் 28 பந்தில் 44 ஓட்டங்கள் விளாச, ஸ்மிட் 16 பந்தில் 31 ஓட்டங்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் நமிபியா அணி 163 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 5 ஓவரில் அந்த அணி 68 ஓட்டங்களை விளாசியது. இலங்கை வீரர் பிரமோத் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு நமீபிய பந்துவீச்சாளர்கள் பவர்பிளேவிலேயே அதிர்ச்சி கொடுத்தனர். குசால் மெண்டிஸ் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து பதும் நிஷங்க, தனுஷ்க குணத்திலக ஆகியோர் ஷிகொங்கோவின் அடுத்தடுத்து பந்துகளில் ஆட்டமிழந்து பெவிலியனுகு நடையைக் கட்டினர்.
இதனால் பவர்பிளேவிலேயே இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 38 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த பானுக ராஜபக்ஷ - அணித்தலைவர் தசுன் ஷானக இணை ஓரளவு நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.
பின் 20 ஓட்டங்களில் ராஜபக்ஷவும், 29 ஓட்டங்களில் தசுன் ஷனகவும் விக்கெட்டுகளை இழக்க, மற்ற வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதனால் 19 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் நமீபியா அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, இலக்கை அணிக்கெதிராக தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளது.
இலங்கை அணி - பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுசன், மகீஷ் தீக்ஷன
நமீபியா அணி - டிவான் லா கொக், மைக்கல் வேன் லின்கன், ஸ்டீபன் பார்ட், ஜான் நிகோல், லொப்டி ஈடோன், கெர்ஹாட் எரஸ்மஸ், ஜேன் பிரைலிங், JJ ஸ்மிட், டேவிட் விசே, ஷேன் கீரின், பெர்னாட், பென் ஸ்கோல்ட்ஸ், பென் சிக்கோங்கோ
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago