2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இலண்டன் மரதனோட்டப் போட்டி: வென்றனர் எலியுட் கிப்சோஜே, பிறிஜிட் கொஸ்கெய்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று இடம்பெற்ற இலண்டன் மரதனோட்டப் போட்டியில் கென்யாவின் எலியுட் கிப்சோஜே, பிறிஜிட் கொஸ்கெய் ஆகியோர் வென்றுள்ளனர்,

அந்தவகையில், இரண்டு மணித்தியாலங்கள், இரண்டு நிமிடங்கள், 38 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து நான்காவது தடவையாக எலியுட் கிப்சோஜே இலண்டன் மரதனோட்டப் போட்டியை வென்றிருந்தார்.

அந்தவகையில், 2016ஆ,ம் ஆண்டு றியோ ஒலிம்பிக் மரதனோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த எலியுட் கிப்சோஜே, தான் பங்கேற்ற 12 மரதனோட்டப் போட்டிகளில் 11இல் வென்றுள்ளார். 2013ஆம் ஆண்டு பேர்லின் மரதனோட்டப் போட்டியில் மாத்திரம் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார்.

எலியுட் கிப்சோஜேக்கு அடுத்ததாக, எதியோப்பியாவின் மொசினெட் ஜெர்மியூ, முலெ வசிஹுன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றிருந்தனர்.

இதேவேளை, அதிகம் எதிர்பார்க்கப்பட்டிருந்த பிரித்தானியாவின் மோ பரா, இரண்டு மணித்தியாலங்கள், மூன்று நிமிடங்கள், 39 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து ஐந்தாமிடத்தையே பெற்றார்.

இந்நிலையில், நடப்பு வெற்றியாளரான சக கென்ய வீராங்கனையான விவியன் செரியோட்டைத் தாண்டியே 25 வயதான பிறிஜிட் கொஸ்கெய் வென்றிருந்தார். அந்தவகையில், இளம் வயதில் லண்டன் மரதனோட்டப் போட்டியில் வென்றவராக தனது பெயரை அவர் பதிந்து கொண்டார்.

இரண்டு மணித்தியாலங்கள், 18 நிமிடங்கள், 20 செக்கன்களில் போட்டித் தூரத்தை பிறிஜிட் கொஸ்கெய் தாண்டியிருந்த நிலையில், குறித்த நேரப் பெறுதியானது இரண்டாமிடம் பெற்ற விவியன் செரியோட், மூன்றாமிடம் பெற்ற எதியோப்பியாவின் றோஸா டெரெஜெயை விட ஏறத்தாழ இரண்டு நிமிடங்கள் குறைவாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X