Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 18 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தகுதிகாண் போட்டிகளில், ஈக்குவடோரில் இன்று அதிகாலை நடைபெற்ற கொலம்பியா, ஈக்குவடோருக்கிடையிலான போட்டியில் 1-6 என்ற கோல் கணக்கில் கொலம்பியா தோற்றது.
கொலம்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேம்ஸ் றொட்றிகாஸ் பெற்றிருந்ததோடு, ஈக்குவடோர் சார்பாக, றொபேர்ட் அர்பொலெடா, ஏஞ்சல் மெனா, மிஷேல் எஸ்ராடா, ஸ்கேவியர் அர்ரெகா, கொன்ஸலோ பிளாட்டா, பெர்விஸ் எஸ்டுபினான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், வெனிசுவேலாவில் நடைபெற்ற சிலி, வெனிசுவேலாவுக்கிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் சிலி தோற்றது. சிலி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஆர்துரோ விடால் பெற்றதோடு, வெனிசுவேலா சார்பாக, லூயிஸ் மாகோ, சலோமன் றொன்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, உருகுவேயில் நடைபெற்ற உருகுவே, பிரேஸிலுக்கிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது. பிரேஸில் சார்பாக, ஆர்தர் மெலோ, றிச்சர்லிஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
38 minute ago
55 minute ago