Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டாயமான உடற்றகுதிச் சோதனைகளுக்கு இன்னும் தோற்றாத மத்திய ஒப்பந்தங்களின் கீழுள்ள 15 வீரர்களுக்குள் சுழற்பந்துவீச்சாளர் வனிது ஹசரங்கவும் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரணவும் உள்ளடங்குவதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆறு வீரர்கள் குறைந்தது ஒரு தடவையாவது சோதனையில் தோல்வியடைந்த நிலையில் தற்போது ஒப்பந்தத்திலுள்ள 45 வீரர்களில் 24 பேர் மாத்திரமே சோதனையில் தேறியுள்ளனர்.
காயம், இடப் பிரச்சினைகளை குறித்த 15 பேரும் சோதனைக்கு இன்னும் தோற்றவில்லை.
கடந்த வாரம் துடுப்பாட்டப் பயிற்சியை மாத்திரமே ஹசரங்க மேற்கொண்ட நிலையில், இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளபோதும் அவர் விளையாடுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லாதிருக்கிறது. சுப்பர் ஜையன்ட்ஸ் குழாமில் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர்கள் முஜீப் உர் ரஹ்மான், மொஹமட் நபி மற்றும் இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர்கள் லியம் டோஸன், றெஹான் அஹ்மட் ஆகியோரிலிருந்து அவர் பிரதியிடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
இதேவேளை முழு வேகத்துடன் இல்லா விட்டாலும் திங்கட்கிழமை (06) பந்துவீச்சுப் பயிற்சியை மேற்கொண்ட பத்திரண ஐ.பி.எல்லில் இணைந்து கொள்வாரென கொல்கத்தா நைட் றைடர்ஸ் நம்புகின்றது.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago