Editorial / 2018 ஜனவரி 09 , பி.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொன்டிங் கடமையாற்றவுள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமனின் கீழேயே ரிக்கி பொன்டிங் பணியாற்றவுள்ளார்.
கடந்தாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் முன்னாள் வீரர்களான ஜஸ்டின் லாங்கர், ஜேஸன் கிலெஸ்பி ஆகியோருடன் இணைந்து இவ்வாறனதொரு பணியை ரிக்கி பொன்டிங் ஆற்றியிருந்தார்.
2015ஆம் ஆண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸை பயிற்றுவித்த ரிக்கி பொன்டிங்ம் டெல்லி டெயார்டெவில்ஸின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார்.
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago