2025 ஜூலை 10, வியாழக்கிழமை

உலக சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் ஹமில்டன்

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் தனது ஐந்தாவது போர்மியுலா வண் உலக சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொண்டார்.

நேற்று  இடம்பெற்ற மெக்ஸிக்கன் கிரான்ட் பிறியில் நான்காமிடம் பெற்றதைத் தொடர்ந்தே தனது ஐந்தாவது உலக சம்பியன்ஷிப் பட்டத்தை ஹமில்டன் வென்றிருந்தார்.

நடப்பாண்டு போர்மியுலா வண் உலக சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தனது போட்டியாளரான பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் குறித்த பந்தயத்தை வென்றிருந்தால், நடப்பாண்டு உலக சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு ஏழாமிடத்தைப் பெற வேண்டியிருந்தது.

எனினும், பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்திருந்த வெட்டல், முதலாமிடத்தைப் பெற்ற றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநர் மக்ஸ் வெர்ஸ்டப்பனுக்குப் பின்னால் இரண்டாமிடத்தையே பெற்றிருந்த நிலையில், மூன்றாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த ஹமில்டன் நான்காமிடத்தைப் பெற்று இலகுவாக இன்னும் இரண்டு பந்தயங்கள் இருக்கையிலேயே உலக சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .