Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உருகுவேக்கெதிராக கடந்த வியாழக்கிழமை (01) இடம்பெற்ற, 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில், அடி வயிற்றுப் பகுதியில் காயமடைந்த ஆர்ஜென்டினாவின் லியனல் மெஸ்ஸி, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெறவுள்ள வெனிசுலாவுக்கெதிரான தகுதிகாண் போட்டியை தவறவிடுகிறார்.
சர்வதேசப் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்து பின்னர் தமது ஓய்வு பெறும் முடிவை வாபஸ் பெற்று, உருகுவேயுக்கெதிரான போட்டியிலேயே ஆர்ஜென்டினா அணிக்குத் திரும்பிய மெஸ்ஸி, குறித்த போட்டியில் பெற்ற கோலின் காரணமாகவே, 1-0 என்ற கோல்கணக்கில் ஆர்ஜென்டினா வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், குறித்த போட்டிக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த மெஸ்ஸி, தனது அடிவயிற்றுப் பகுதி தன்னை மிகவும் பாதிப்பதாக கூறியிருந்தார். இதேவேளை, கருத்துத் தெரிவித்திருந்த ஆர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் எடுக்கார்டோ பாஸோ, அவரால் விளையாட முடியாது என்றும், தாங்கள் அவரைக் கவனித்துத் கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார்.
தென்னமெரிக்க தகுதிகாண் குழுவின் 18 போட்டிகளில், ஏழு போட்டிகளின் முடிவில், உருகுவேயுடனான வெற்றியைத் தொடர்ந்து, 14 புள்ளிகளுடன் ஆர்ஜென்டினா முதலிடத்தில் இருப்பதுடன், உருகுவே, கொலம்பியா, ஈக்குவடோர் ஆகிய நாடுகள் 13 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலடிப்படையில், உருகுவே, கொலம்பியா, ஈக்குவடோர் என்ற வரிசையில் காணப்படுகின்றன. பிரேஸில், 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் காணப்படுகின்றது.
குழுவில் முதல் நான்கு இடங்கள் பெறும் அணிகள், ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறுவதுடன், ஐந்தாவது இடம் பெறும் அணி, நியூஸிலாந்து, நியூ கலடோனியா, ஃபிஜி, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள் அல்லது தஹித்தி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கடல் நாடுகளுகள் குழுவில் உள்ள ஒரு நாடுடன் இரண்டு சுற்றுப் போட்டிகளில் மோத வேண்டி இருக்கும்.
18 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago