Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மே 26 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது, இங்கிலாந்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் காயங்கள் இங்கிலாந்துக் குழாமில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கெதிரான பயிற்சிப் போட்டியின்போது, இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான மார்க் வூட், ஜொவ்ரா ஆர்ச்சர் ஆகியோர் சில நிமிட இடைவேளைகளில் களத்திலிருந்து வெளியேறியிருந்ததுடன், சுழற்பந்துவீச்சாளர் லியம் டோஸனும் பின்னர் களத்திலிருந்து வெளியேறியிருந்தார். இதில், ஜொவ்ரா ஆர்ச்சர் மட்டுமே சிகிச்சையின் பின்னர் களத்துக்கு மீண்டும் திரும்பியிருந்தார்.
மார்க் வூட், தனது நான்காவது ஓவரில் முதலாவது பந்தை வீசிய பின்னர் இடது காலில் ஏற்பட்ட பிரச்சினையொன்று காரணமாக களத்தை விட்டு வெளியேறியிருந்தார். இவருக்கு ஸ்கான் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், மார்க் வூட்டுக்குப் பதிலாக அதிர்ச்சிகரமான மாற்றுவீரர் தேர்வாக களமிறங்கிய ஜொவ்ரா ஆர்ச்சர், களத்தடுப்பில் ஈடுபடும்போது ஏற்பட்ட காயம் காரணமாக, மார்க் வூட்டை இரண்டு பந்துகளைத் தொடர்ந்து பின்தொடர்ந்திருந்தார்.
இதேவேளை, களத்தடுப்பில் ஈடுபடும்போது லியம் டோஸனின் வலதுகை மோதிர விரலில் கிழிவு ஏற்பட்டிருந்தது. ஆகையால், லியம் டோஸன் துடுப்பெடுத்தாடியிருக்கவில்லை.
அந்தவகையில், நிலமை இவ்வாறாக இருக்க குறிப்பிட்ட நேரத்துக்கு இங்கிலாந்தின் உதவிப் பயிற்றுவிப்பாளர்களிலொருவரான போல் கொலிங்வூட் களத்தடுப்பிலீடுபட்டிருந்தார்.
இதேவேளை, இங்கிலாந்தின் தலைவர் ஒய்ன் மோர்கனும் உபாதைக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago