Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 02 , பி.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு இந்தியா தகுதிபெற்றுள்ள நிலையில், அந்த வாய்பை பங்களாதேஷ் இழந்துள்ளது.
பேர்மிங்ஹாமில் இன்று இடம்பெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் இந்தியா வென்றமையைத் தொடர்ந்தே புள்ளிகள் பட்டியலில் 13 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிப் போட்டிக்கான இடத்தை இந்தியா உறுதி செய்தது. ஏனெனில், புள்ளிகள் பட்டியலில் ஐந்தாமிடத்தில் காணப்படும் பாகிஸ்தான் தமது அடுத்த போட்டியில் வென்றால் கூட 11 புள்ளிகளையே பெறும் என்பதால் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெறும் முதல் நான்கு நிலை அணிகளுக்குள்ளேயே இந்தியா காணப்படும்.
மறுபக்கமாக ஏழு புள்ளிகளுடன் ஏழாமிடத்தில் காணப்படும் பங்களாதேஷ், அடுத்த போட்டியில் வென்றால் கூட ஒன்பது புள்ளிகளைப் பெற்று அதிகபட்சமாக ஐந்தாமிடத்துக்கே முன்னேற முடியும். ஏனெனில், நான்காமிடத்திலுள்ள இங்கிலாந்து 10 புள்ளிகளுடன் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 314/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோகித் ஷர்மா 104 (92), லோகேஷ் ராகுல் 77 (92), றிஷப் பண்ட் 48 (41), மகேந்திர சிங் டோணி 35 (33), விராத் கோலி 26 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 5/59 [10], ஷகிப் அல் ஹஸன் 1/41 [10], செளமியா சர்க்கார் 1/33 [6], ருபெல் ஹொஸைன் 1/48 [8])
பங்களாதேஷ்: 286/10 (48 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் 66 (74), மொஹம்ட் சைபுடீன் ஆ.இ 51 (38), சபீர் ரஹ்மான் 36 (36), செளமியா சர்க்கார் 33 (38), முஷ்பிக்கூர் ரஹீம் 24 (23), லிட்டன் தாஸ் 22 (24), தமிம் இக்பால் 22 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/55 [10], ஹர்டிக் பாண்டியா 3/60 [10], யுஸ்வேந்திர சஹால் 1/50 [10], புவ்னேஷ்வர் குமார் 1/51 [9])
போட்டியின் நாயகன்: ரோஹித் ஷர்மா
இந்நிலையில், செஸ்டர்-லீ-ஸ்றீட்டில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில் நியூசிலாந்தை இங்கிலாந்து எதிர்கொள்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago