Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 28 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு பிரேஸில் தகுதிபெற்றுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற சேர்பியாவுடனான குழு ஈ போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே குறித்த குழுவின் வெற்றியாளர்களாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு பிரேஸில் சென்றுள்ளது.
இப்போட்டியின் 36ஆவது நிமிடத்தில், பிலிப் கோச்சினியோவிடமிருந்து வந்த போலின்ஹோ கோலாக்க முன்னிலை பெற்ற பிரேஸில், 68ஆவது நிமிடத்தில், நேமரின் மூலையுதையை தியாகோ சில்வா தலையால் முட்டிக் கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற சுவிற்ஸர்லாந்து, கொஸ்டா றிக்காவுக்கிடையிலான மற்றைய குழு ஈ போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. சுவிற்ஸர்லாந்து சார்பாக, பிளெரிங் ஜிமை, ஜோசிப் ட்ரிமிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, கொஸ்டா றிக்கா சார்பாகப் பெறப்பட்ட ஒரு கோலை கென்டால் வொற்சன் பெற்றதோடு மற்றையது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொஸ்டாறிக்கா, சேர்பியாவுடனான போட்டிகளில் வென்றதுடன், சுவிற்ஸர்லாந்துடனான போட்டியை சமன்செய்த பிரேஸில் ஏழு புள்ளிகளுடன் குழு ஈயிலிருந்து வெற்றியாளர்களாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றதுடன், சேர்பியாவை வென்றதுடன், பிரேஸில், கொஸ்டா றிக்காவுடனான போட்டிகளை சமநிலையில் முடித்துக் கொண்ட சுவிற்ஸர்லாந்து ஐந்து புள்ளிகளுடன் குழு ஈயிலிருந்து இரண்டாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது.
இதேவேளை, கொஸ்டா றிக்காவை வென்றதுடன், பிரேஸில், சுவிற்ஸர்லாந்திடம் தோல்வியைத் தளுவிய சேர்பியா மூன்று புள்ளிகளுடனும் சுவிற்ஸர்லாந்துடனான போட்டியை சமன்செய்த போதும் பிரேஸில், சேர்பியாவிடம் தோல்வியைத் தளுவிய கொஸ்டா றிக்கா ஒரு புள்ளியுடன் காணப்பட்ட நிலையில் இவ்வாண்டு உலகக் கிண்ணத்தில் குழு நிலைப் போட்டிகளுடன் வெளியேறின.
இந்நிலையில், உலகக் கிண்ணத்தின் மாபெரும் அதிர்ச்சியாக, நடப்புச் சம்பியன்கள் ஜேர்மனி குழுநிலைப் போட்டிகளுடன் நேற்று வெளியேறியது. குழு எவ் போட்டியொன்றில், தென்கொரியாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நிலையிலேயே உலகக் கிண்ணத்திலிருந்து குழுநிலைப் போட்டிகளுடன் ஜேர்மனி வெளியேறியது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றைய குழு எவ் போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிக்கோவை வென்ற சுவீடன் குழு எவ்வின் வெற்றியாளர்களாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது.
அந்தவகையில், ஜேர்மனியிடம் தோல்வியடைந்தபோதும் தென்கொரியா, மெக்ஸிக்கோவை வென்ற சுவீடன் ஆறு புள்ளிகளுடன் குழு எவ்வின் வெற்றியாளர்களாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது. மெக்ஸிக்கோ, சுவீடனுடன் தோற்றபோதும் ஜேர்மனி, தென்கொரியாவை வென்றதன் காரணமாக ஆறு புள்ளிகளுடன் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது. இதில், சுவீடனும் மெக்ஸிக்கோவும் ஆறு புள்ளிகளையே பெற்றபோதும் மெக்ஸிக்கோவை விட மேம்பட்ட கோல் வித்தியாசத்தை சுவீடன் கொண்டிருந்தது.
சுவீடனை மாத்திரம் வென்ற ஜேர்மனி, மெக்ஸிக்கோ, தென்கொரியாவுடன் தோல்வியடைந்த நிலையில் மூன்று புள்ளிகளையே பெற்றிருந்த நிலையிலும் ஜேர்மனியை வென்றபோதும் மெக்ஸிக்கோ, சுவீடனிடம் தோல்வியடைந்த காரணமாக மூன்று புள்ளிகளையே பெற்றிருந்த தென்கொரியாவோடு குழுநிலைப் போட்டிகளோடு இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.
அந்தவகையில், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், பிரேஸிலை மெக்ஸிக்கோவும் சுவீடனை சுவிற்ஸர்லாந்தும் சந்திக்கவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
52 minute ago