Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 20 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்றிரவு இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் எகிப்தை ரஷ்யா வீழ்த்தியது.
சென். பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற குறித்த போட்டியில், தமது அணியின் ஆரம்பப் போட்டியில் விளையாடியிருக்காத எகிப்தின் நட்சத்திர முன்கள வீரரான மொஹமட் சாலா களமிறங்கியிருந்தார்.
எவ்வாறெனினும் போட்டியின் முதற்பாதியில் இரண்டு அணிகளாலும் சேர்த்து ரஷ்யாவால் கோல் கம்பத்தை நோக்கி உதையப்பட்ட உதையொன்றே இரண்டு அணிகளாலும் சேர்த்து கோல் கம்பத்தை நோக்கி உதையப்பட்ட ஒரேயொரு உதையாக இருந்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது பாதி ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் பெறப்பட்ட ஓவ்ண் கோல் காரணமாக முன்னிலை பெற்ற ரஷ்யா, போட்டியின் 59ஆவது நிமிடத்தில் மரியோ பெர்ணான்டஸிடமிருந்து வந்த பந்தை டெனிஸ் செரஷெவ் கோலாக்கியதோடு தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியதுடன், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அர்டெம் ஸூபா பெற்ற கோலோடு 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுக் கொண்டது.
தொடர்ந்த 73ஆவது நிமிடத்தில், தான் வீழ்த்தப்பட கிடைக்கப்பெற்ற பெனால்டியை கோலாக்கி ஆறுதல் கோலை மொஹமட் சாலா பெற இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வென்றது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற போலந்துடனான குழு எச் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் செனகல் வென்றது. செனகலின் ஒரு கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்ததுடன், மற்றைய கோலை எம் பயே நியோங் பெற்றிருந்தார். போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெக்கோஸ் கிரிகோவியாக் பெற்றார். இதில், காயத்திலிருந்து களத்துக்குள் நுழைந்த எம் பயே நியோங், போலந்து மத்தியகளத்தில் பின்னோக்கி மேற்கொள்ளப்பட்ட பந்துப்பரிமாற்றத்தை மறித்தே கோலைப் பெற்றிருந்தது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற கொலம்பியாவுடனான குழு எச் போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வென்றிருந்தது. ஜப்பான் சார்பாக, ஷின்ஜி ககாவா, யுயா ஒஸாகோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்ததோடு, கொலம்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜுவான் குயின்டரோ பெற்றிருந்தார். அந்தவகையில், உலகக் கிண்ணப் போட்டியொன்றில், தென்னமெரிக்க அணியொன்றை வென்ற முதலாவது ஆசிய அணியாக இப்போட்டியின் மூலம் தமது பெயரை ஜப்பான் பதிவுசெய்துகொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago