2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணம்: போலந்தை வென்றது கொலம்பியா

Editorial   / 2018 ஜூன் 25 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்றிரவு இடம்பெற்ற போலந்துடனான குழு எச் போட்டியில் கொலம்பியா வென்றது.

இப்போட்டியின் 40ஆவது நிமிடத்தில், ஜேம்ஸ் றொட்றிகாஸ் கொடுத்த பந்தை யெரி மினா தலையால் முட்டிக் கோலாக்க முன்னிலை பெற்ற கொலம்பியா, போட்டியின் 70ஆவது நிமிடத்தில் றடமெல் பல்காவோ பெற்ற கோலுடன் முன்னிலையை இரட்டிப்பாக்கியதுடன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஜேம்ஸ் றொட்றிகாஸ் கொடுத்த பந்தை ஜுவான் குவராடோ கோலாக்கியதோடு 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்தவகையில், தமது முதலாவது குழுநிலைப் போட்டியில் செனகலிடம் தோல்வியுற்றிருந்த போலந்து, குழுநிலைப் போட்டிகளுடன் இவ்வுலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறுகிறது.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற செனகல், ஜப்பான் அணிகளுக்கிடையிலான குழு எச் போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. செனகல் சார்பாக, சாடியோ மனே, மூஸா வேக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஜப்பான் சார்பாக, தகஷி இனுயி, கெய்சுகே ஹொன்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற பனாமாவுடனான குழு ஜி போட்டியொன்றில் 6-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றிருந்தது. இங்கிலாந்து சார்பாக, அவ்வணியின் தலைவர் ஹரி கேன் மூன்று கோல்களையும் ஜோன் ஸ்டோன்ஸ் இரண்டு கோல்களையும் ஜெஸி லிங்கார்ட் ஒரு கோலையும் பெற்றனர். பனாமா சார்பாகப் பெறப்பட்ட கோலை பிலிப்பே பலோய் பெற்றிருந்தார்.

அந்தவகையில், தமது குழுநிலைப் போட்டியில் துனீஷியாவை வென்றிருந்த இங்கிலாது, இப்போட்டியில் வென்றதையடுத்து இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெறுவதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .