2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணம்: மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இலங்கை

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், செஸ்டர்-லீ-ஸ்றீட்டில் இன்று இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியை இலங்கை வென்றது.

இந்நிலையில், இவ்வுலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்பை ஏலவே மேற்கிந்தியத் தீவுகள் இழந்த நிலையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தியாவுடனான போட்டியில் இங்கிலாந்து வென்றமையைத் தொடர்ந்து அந்த வாய்பை இலங்கையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

இலங்கை: 338/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணான்டோ 104 (103), குசல் பெரேரா 64 (51), லஹிரு திரிமான்ன ஆ.இ 45 (33), குசல் மென்டிஸ் 39 (41), திமுத் கருணாரத்ன 32 (48), அஞ்சலோ மத்தியூஸ் 26 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 2/59 [10], ஃபேபியன் அலன் 1/44 [8], ஒஷேன் தோமஸ் 1/58 [10])

மேற்கிந்தியத் தீவுகள்: 315/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக்கலஸ் பூரான் 118 (103), ஃபேபியன் அலன் 51 (32), கிறிஸ் கெய்ல் 35 (48), ஷிம்ரோன் ஹெட்மயர் 29 (38), ஜேஸன் ஹோல்டர் 26 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் மலிங்க 3/55 [10], அஞ்சலோ மத்தியூஸ் 1/6[2])

போட்டியின் நாயகன்: அவிஷ்க பெர்ணான்டோ

இதேவேளை, பேர்மிங்ஹாமில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பிக்கவுள்ள போட்டியில் பங்களாதேஷை இந்தியா எதிர்கொள்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .