Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 31 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊக்கமருந்து மீறலொன்றுக்காக, இவ்வாண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பொதுவாக இருமல் பாணிகளில் காணப்படும் தடைசெய்யப்பட்ட பதார்த்தமொன்றை பிறித்திவி ஷா அறியாமல் உள்ளெடுத்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் வெளியீடொன்று தெரிவிக்கின்றது.
அந்தவகையில், இடுப்புக் காயமொன்று காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் குழாமில் தேர்வு செய்யப்பட்டிருக்காத பிறித்திவி ஷா, இவ்வாண்டு ஒக்டோபரில் சொந்த மண்ணில் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகள், இவ்வாண்டு நவம்பர் 14ஆம் திகதி ஆரம்பிக்கும் பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தூரில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற பஞ்சாப்புக்கெதிரான சைட் முஷ்டாக் அலி கிண்ணப் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊக்கமருந்துக்கெதிரான சோதனைத் திட்டத்தின் கீழ் சிறுநீர் மாதிரியொன்றை அழித்திருந்த நிலையில், அது பின்னர் சோதிக்கப்பட்ட நிலையில் டெர்புடலின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவரகத்தின் போட்டியின்போது மற்றும் வெளியேயான தடைசெய்யப்பட்ட பதார்த்தங்களின் கீழ் டெர்புடலின் காணப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் வெளியீடு கூறுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago