Editorial / 2018 ஜனவரி 09 , பி.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊக்கமருந்து மீறலொன்றுக்காக, இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசுப் பதான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் யூசுப் பதானுக்கு ஐந்து மாத தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது கடந்தாண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதியிலிருந்து கணக்கெடுக்கப்படுவதால் இத்தடையானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. கடந்தாண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் தொழில்முறையாக யூசுப் பதான் இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யூசுப் பதானிடம் கடந்தாண்டு மார்ச்சில் சேகரிக்கப்பட்ட மாதிரியிலேயே, உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவரகத்தால் தடை செய்யப்பட்ட டெர்பியூட்டலினைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
45 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago