Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
செளதாம்டனின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை விக்டர் யோக்கரிஷ் பெற்றதோடு, செளதாம்டன் சார்பாக ரொஸ் ஸ்டூவர்ட், ஷெயா சார்ள்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற லிவர்பூலுடனான காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றது. சிற்றி சார்பாக மூன்று கோல்களை எர்லிங் ஹலான்ட் பெற்றதோடு, அந்தோனி செமென்யோ ஒரு கோலைப் பெற்றார்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago