Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில் நிலவும் பாதுகாப்புத் தொடர்பான கவலைகளுக்கு மத்தியில், எந்தவொரு வீரரும் பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படமாட்டார்கள் என இங்கிலாந்து அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிகளுக்கான அணித்தலைவர் ஒயின் மோர்கன் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷுக்கு சுற்றுலா செய்வதற்கான பாதுகாப்பு இருக்கின்றதா என்பது குறித்து ஆராய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் பங்களாதேஷுக்கு சென்றிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (25) அவர்கள் குழாமைச் சந்திக்கவுள்ளனர். இதனையடுத்தே, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரிற்காக எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி இங்கிலாந்துக் குழாம் பங்களாதேஷுக்கு செல்லவுள்ளது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மோர்கன், குறித்த ஒரு தொடருக்கு செல்லுமாறு ஒருவரும் ஒருபோதும் வலியுறுத்தப்பட மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
தவிர, குழுவாக இருப்பதே தங்களுக்கு முக்கியம் என மேலும் தெரிவித்த மோர்கன், சரியான முடிவுகளை எடுப்பதற்காக, தாங்கள் நம்புவோரால் அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும், அதிலிருந்து அங்கால் செல்லலாம் என்று கூறியுள்ளார்.
கடந்தாண்டு ஒக்டோபர் மாதம், தமது டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா ஒத்தி வைத்திருந்த நிலையில், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து, பங்களாதேஷுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், பணயக்கைதிகள் 20 பேரும் பொலிஸ் அதிகாரிகள் இரண்டு பேரும் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து பாதுகாப்பு நிலைமைகளை இங்கிலாந்து கிரிக்கெட் சபை அவதானித்து வருகிறது.
21 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago