Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எஃப்.எல்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது.
யுனைட்டெட் சார்பாக, எடின்சன் கவானி, அந்தோனி மார்ஷியல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஸ்டோக் சிற்றியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. டொட்டென்ஹாம் சார்பாக, கரெத் பேல், பென் டேவிஸ், ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்டோக் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோர்டான் தொம்ஸன் பெற்றார்.
13 minute ago
20 minute ago
21 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
21 minute ago
37 minute ago