Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் இரண்டாம்நிலை வீரரான ரஃபேல் நடால் தகுதிபெற்றுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மானை எதிர்கொண்ட ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
நாளை மறுதினம் இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் மட்டியோ பெரெட்டினியை ரபேல் நடால் எதிர்கொள்ளவுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், பிரான்ஸின் கயெல் மொன்ஃபில்ஸை 3-6, 6-3, 6-2, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் போராடி வென்றே அரையிறுதிப் போட்டிக்கு மட்டியோ பெரெட்டினி தகுதிபெற்றிருந்தார்.
இந்நிலையில், நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மற்றைய அரையிறுதிப் போட்டியில், பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோவ்வை உலகின் ஐந்தாம்நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடெவ் எதிர்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸை 3-6, 6-2, 6-3 என்ற் செட் கணக்கில் வென்ற கனடாவின் பியன்கா அன்ட்றீச்சு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
தனது அரையிறுதிப் போட்டியில், சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை பியன்கா அன்ட்றீச்சு எதிர்கொள்ளவுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் குரோஷியாவின் டொன்னா வெகிச்சை வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பெலின்டா பென்சிச் தகுதிபெற்றிருந்தார்.
இந்நிலையில், மற்றைய அரையிறுதிப் போட்டியில் உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை, உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா எதிர்கொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
3 hours ago