Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, உலகின் முதல்நிலை வீரரும் நடப்புச் சம்பியனுமான ஸ்பெய்னின் ரபேல் நடால் தகுதிபெற்றுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், உலகின் ஒன்பதாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்மை வென்றே 17 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரபேல் நடால் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
குறித்த போட்டியின் முதலாவது செட்டை 0-6 என்ற ரீதியில் நடால் இழந்திருந்தபோதும் சுதாகரித்துக் கொண்டு அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 7-5 என்ற ரீதியில் கைப்பற்றினார். எனினும் டைபிரேக்கர் வரை சென்ற நான்காவது செட்டை7-6 (7-4) என்ற ரீதியில் கைப்பற்றிய தெய்ம் போட்டியை ஐந்தாவது செட்டுக்கு கொண்டு சென்றார். எனினும் டைபிரேக்கர் வரை சென்ற தீர்க்கமான ஐந்தாவது செட்டை 7-6 (7-5) என்ற ரீதியில் கைப்பற்றி நான்கு மணித்தியாலங்கள் 49 நிமிடங்கள் வரை நீடித்த போட்டியில் வென்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 2-6, 3-6 என்ற நேர் செட்களில் இலத்தீவியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவிடம் தோல்வியடைந்த நடப்புச் சம்பியனும் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீபன்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 6-7 (5-7), 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னரை வென்ற உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போத்ரோ அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, இன்று காலை இடம்பெற்ற காலிறுதிப் போட்டியொன்றில், 4-6, 3-6 என்ற செட் கணக்கில் 23 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்த உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago