Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றோடு உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான ஐக்கிய இராச்சியத்தின் அன்டி மரே வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஸ்பெய்னின் பெர்ணான்டோ வேர்டாஸ்கோவை நேற்று முன்தினம் எதிர்கொண்ட அன்டி மரே, 7-5, 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்திருந்தார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஏனைய இரண்டாவது சுற்றுப் போட்டிகளில், நடப்புச் சம்பியன்களான ஸ்பெய்னின் ரபேல் நடால், ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீபன்ஸ் உள்ளிட்ட முதல் 10 தரவரிசையில் காணப்படும் ஏழு வீரர்களும் 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், அவரின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை உலகின் முதல்நிலை வீரரான நடால், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் கனடாவின் வசேக் பொப்ஸிலை வென்றிருந்தார்.
உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீபன்ஸ், 4-6, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் உக்ரேனின் அன்டெலினா கலினாவை வென்றிருந்தார்.
உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போத்ரோ, 6-3, 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை வென்றிருந்தார்.
உலகின் ஐந்தாம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜெரெமி சார்டியை வென்றார்.
உலகின் ஒன்பதாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்ம், 6-7 (5-7), 6-3, 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனை வென்றார்.
உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஜேர்மனியின் டட்ஜ்னா மரியாவை வென்றார்.
உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் றோமானியாவின் அனா பொக்டனை வென்றார்.
இந்நிலையில், தத்தமது இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் முறையே 6-2, 6-2 மற்றும் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ஜேர்மனியின் கரினா வித்தோவ்ட், இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியை வென்ற உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் நாளைய மூன்றாவது சுற்றுப் போட்டியில் சந்திக்கவுள்ளனர்.
உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் ஜூலியா ஜோர்ஜஸ், நேற்று முன்தினம் இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-7 (10-12), 3-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எகத்திரினா மகரோவாவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago