Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மும்பை, திலக் வர்மாவின் ஆட்டமிழக்காத 101 (45), நாமன் திர்ரின் 45 (32) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ககிஸோ றபாடா 4-0-33-3, மொஹமட் சிராஜ் 4-0-25-1, ரஷீட் கான் 4-0-31-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 200 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய குஜராத், ஜஸ்பிரிட் பும்ரா, அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா, அஷ்வனி குமார் (4), மிற்செல் சான்ட்னெர் (2), ஏ.எம். கஸன்ஃபாரிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களையே பெற்று 99 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக திலக் தெரிவானார்.
40 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
46 minute ago
1 hours ago