Shanmugan Murugavel / 2025 மே 22 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற்றுள்ளது.
மும்பையில் புதன்கிழமை (21) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்கு மும்பை தகுதி பெற, தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை டெல்லி இழந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மும்பை, சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 73 (43), திலக் வர்மாவின் 27 (27), றயான் றிக்கெல்டனின் 25 (18), நாம் திர்ரின் ஆட்டமிழக்காத 24 (08), வில் ஜக்ஸின் 21 (13) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4-0-22-1, விப்ராஜ் நிகம் 4-0-25-0, முஸ்தபிசூர் ரஹ்மான் 4-0-30-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 181 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, தீபக் சஹர், ட்ரெண்ட் போல்ட், வில் ஜக்ஸ், மிற்செல் சான்ட்னெர் (3), ஜஸ்பிரிட் பும்ரா (3), கரண் ஷர்மாவிடன் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களையே பெற்று 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக சூரியகுமார் யாதவ் தெரிவானார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago