Shanmugan Murugavel / 2025 மே 06 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை சண்றைசர்ஸ் ஹைதரபாத் இழந்தது.
ஹைதரபாத்தில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் மழை காரணமாக முடிவேதும் பெறப்படாத நிலையிலேயே தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை சண்றைசர்ஸ் இழந்தது.
தற்போது 11 போட்டிகளில் ஏழு புள்ளிகளையே சண்றைசர்ஸ் பெற்றுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் வென்றாலும் அதிகபட்சமாக 13 புள்ளிகளையே பெற முடியுமென்ற நிலையில் தற்போது நான்காமிடத்திலுள்ள குஜராத் டைட்டாஸ் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட கப்பிட்டல்ஸ், கட்டுக்கோப்பான அணித்தலைவர் பற் கமின்ஸ் (3), ஹர்ஷால் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றவுடன் மழை குறுக்கிட்டிருந்தது. துடுப்பாட்டத்தில் அஷுதோஷ் ஷர்மா 41 (26), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 41 (36) ஓட்டங்களைப் பெற்றனர்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago