2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ்

Shanmugan Murugavel   / 2025 மே 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை சென்னை சுப்பர் கிங்ஸ் இழந்தது.

சென்னையில் புதன்கிழமை (30) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை சென்னை சுப்பர் கிங்ஸ் இழந்துள்ளது.  

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சென்னை, 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.  பந்துவீச்சில் யுஸ்வேந்திர சஹால் ஹட்-ட்ரிக் உள்ளடங்கலாக 4, அர்ஷ்டீப் சிங், மார்கோ ஜன்சன் ஆகியோர் தலா 2, அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய், ஹர்பிறீட் பிறார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர். துடுப்பாட்டத்தில் சாம் கர்ரன் 88 (47), டெவால்ட் பிறெவிஸ் 32 (26) ஓட்டங்களைப் பெற்றனர்.  

பதிலுக்கு 191 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் 72 (41), பிரப்சிம்ரன் சிங்கின் 54 (36), ஷஷாங்க் சிங்கின் 23 (12), பிரியன்ஷ் ஆர்யாவின் 23 (15) ஓட்டங்களோடு 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் கலீல் அஹ்மட் 3.4-0-28-2, நூர் அஹ்மட் 4-0-39-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.  

இப்போட்டியின் நாயகனாக ஐயர் தெரிவானார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X