2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஒ.நா.ச.போ தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Editorial   / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், வான்கரேயில், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

டெஸ்ட் தொடரில் 2-0 என வெள்ளையடிக்கப்பட்டபோதும் மேற்கிந்தியத் தீவுகளின் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ் போன்ற அதிரடி வீரர்கள் இடம்பெற்றிருப்பது நிச்சயம் பலத்தை வழங்கும். அதுவும் நியூசிலாந்துன் குறுகிய தட்டையான மைதானங்களில் கிறிஸ் கெய்லின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

எவ்வாறெனினும், டிம் செளதி, ட்ரெண்ட் போல்ட் போன்ற சிரேஷ்ட வீரர்களுடன் மற் ஹென்றி, அடம் மில்ன், லொக்கி பெர்கியூஸன், டவ் பிரேஸ்வெல் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சு வரிசையை மேற்கிந்தியத் தீவுகள் எதிர்கொள்வது கடினமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X