Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளைக் கொண்ட ஆறாவது ஒளடி கிண்ணத் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சம்பியனானது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வண்ணியுடனான இறுதிப் போட்டியில் வென்றே டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா இவ்விரண்டு கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில் பெனால்டியில் 6-5 என்ற ரீதியில் வென்றே டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சம்பியனாகியிருந்தது.
போட்டியின் வழமையான நேரத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக எரிக் லமெலா, கிறிஸ்டியன் எரிக்ஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், பயேர்ண் மியூனிச் சார்பாக ஜான்-ஃபியட்டே அர்ப், அல்போன்ஸோ டேவிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
பெனால்டியில் டொட்டென்ஹாம் சார்பாக டொபி அல்டர்வெய்ல்ட், ஹரி கேன், சண் ஹெயுங்-மின், ஜஸ் றொலெஸ், ஒலிவர் ஸ்கிப், ஜப்ஹெட் தன்கன்கா ஆகியோர் பெனால்டிகளை உட்செலுத்தியிருந்த நிலையில் கிறிஸ்டியன் எரிக்ஸன் தனது பெனால்டியை உட்செலுத்தத் தவறியிருந்தார்.
மறுபக்கமாக பயேர்ண் மியூனிச் சார்பாக தியாகோ அல்கான்டரா, தோமஸ் மல்லர், றெனட்டோ சந்தேஸ், றொபேர்ட் லெவன்டோஸ்கி, சர்பிறீட் சிங் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்த நிலையில், டேவிட் அலபா, ஜெரோம் பூட்டாங்கின் பெனால்டிகளை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் கோல் காப்பாளர் போலோ கஸ்ஸனிகா தடுத்திருந்த நிலையிலேயே 6-5 என்ற ரீதியில் பெனால்டியில் வென்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சம்பியனாகியது.
இதேவேளை இப்போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற மூன்றாமிடத்துக்கான போட்டியில் துருக்கியக் கழகமான ஃபெனர்பாச்சேயை 5-3 என்ற கோல் கணக்கில் வென்ற ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது. றியல் மட்ரிட் சார்பாக, கரிம் பென்ஸீமா மூன்று கோல்களையும், நாச்சோ, மரியானோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஃபெனர்பாச்சே சார்பாக கரி றொட்றிகாஸ், நபில் டிரார், ஒஸான் துஃபான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
4 hours ago