Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 01 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒஸ்திரியன் கிரான்ட் பிறீயில், இரண்டு சுற்றுக்கள் இருக்கத்தக்கதாக ஃபெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க்கை முந்திய றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
நேற்று இடம்பெற்ற குறித்த இப்பந்தயத்தின் மக்ஸ் வெர்ஸ்டப்பனின் வெற்றியானது, இப்பந்தயம் முடிவடைந்த பின்னர் மூன்று மணித்தியாலங்களில் சார்ள்ஸ் லெக்கலெர்க்கை நியாயமில்லாமல் ஓடுபாதையை விட்டு மக்ஸ் வெர்ஸ்டப்பன் விலகச் செய்தாரா என்ற விசாரணையொன்றைத் தொடர்ந்தே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இப்பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மக்ஸ் வெர்ஸ்டப்பன் மோசமான ஆரம்பத்தைப் பெற்று ஏழாமிடத்துக்கு பின்தங்கிய நிலையில், முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த சார்ள்ஸ் லெக்கலெர்க் பந்தயத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்தார் போலத் தோன்றியிருந்தது.
இந்நிலையில், சார்ள்ஸ் லெக்கலெர்க்கை விட 10 சுற்றுக்கள் பின்னதாக மக்ஸ் வெர்ஸ்டப்பனின் டயர்களை றெட் புல் அணி மாற்றியிருந்த நிலையில், நான்காமிடத்திலிருந்து புதிய டயர்களுடன் போராடி மக்ஸ் வெர்ஸ்டப்பன் இப்பந்தயத்தை வென்றிருந்தார்.
இப்பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்த நிலையில், நான்காமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்திருந்த ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் நான்காமிடத்தைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், நான்காமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரும், நடப்பு ஃபோர்மியுலா வண் சம்பியனான லூயிஸ் ஹமில்டன், தனது காரின் முன் பக்கத்தை சேதப்படுத்திய நிலையில், அவர் தனது டயர்களை மாற்றும்போது 30ஆவது சுற்றில் அவரது காரின் முன்பக்கமும் மாற்றப்பட வேண்டியிருந்த நிலையில் ஐந்தாமிடத்தையே பெற்றிருந்தார். இப்பந்தயத்தின் அதீத வெப்பமான வானிலையில் தமது கார்களின் இயந்திரங்கள் வெப்பமடையும் பிரச்சினையையும் மெர்சிடீஸ் அணி எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், இவ்வாண்டு ஃபோர்மியிலான வண் சம்பியன்ஷிப்பின் மெர்சிடீஸ் அணியின் தொடர் வெற்றியானது இப்பந்தயத்துடன் முடிவுக்கு வந்தபோதும் இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 197 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லூயிஸ் ஹமில்டன் தொடருவதுடன், அவரை விட 31 புள்ளிகள் குறைவாக 166 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் வல்ட்டேரிஒ போத்தாஸ் காணப்படுகின்றார்.
இந்நிலையில், 126 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மக்ஸ் வெர்ஸ்டப்பனும், 123 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செபஸ்டியன் வெட்டலும், 105 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் சார்ள்ஸ் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago