2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

ஓய்விலிருந்து மீண்டார் மிஸ்பா

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 02 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. சிட்னியில் இடம்பெறவுள்ள இப்போட்டி, நாளை காலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், 3ஆவது போட்டியிலும் வெற்றிபெற்று, வெள்ளையடிப்பை மேற்கொள்ளும் எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது.

மறுபக்கமாக, முதலிரு போட்டிகளிலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, வெள்ளையடிப்பைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்குடன் களமிறங்குகிறது. அதைவிட, அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக்கின் ஓய்வுபெறும் கருத்துகளுக்கு மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப் பின், அவ்வணி களமிறங்குகிறது.

2ஆவது போட்டியில் தோல்வியடைந்த பின்னர், ஓய்வுபெறவுள்ளார் போன்று, மிஸ்பா உல் ஹக் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தன. ஆனால், 3ஆவது போட்டியில் அவர் விளையாடுவார் எனவும் தலைமை வகிப்பார் எனவும் பின்னர் அறிவிக்கப்பட்டது.

தற்போது கருத்துத் தெரிவித்துள்ள மிஸ்பா, "இப்போது இல்லை. ஓய்வுபெறுதல் என்பது, எனது மனதிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளது. அதைப் பற்றி நான் சிந்திப்பேனாக இருந்தான், விளையாடுவது கடினமாக இருக்கும். இந்தப் போட்டி, இத்தொடரின் முதலாவது போட்டியாகவும் இறுதிப் போட்டியாகவும் கருத வேண்டும். தற்போதுள்ள நிலையில், அப்படித் தான் எண்ணுகிறோம். 2016ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. தற்போது இது, 2017. எது முடிந்ததோ, அது முடிந்துவிட்டது" என்று குறிப்பிட்டார்.

2ஆவது போட்டியில் விளையாடிய ஜக்ஸன் பேர்டுக்குப் பதிலாக ஸ்டீவன் ஓஃப் கீயும், நிக் மடின்சனுக்குப் பதிலாக சகலதுறை வீரர் ஹில்ட்டன் கார்ட்ரைட்டும் விளையாடவுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில், சொஹைல் கானுக்குப் பதிலாக, சுழற்பந்து வீச்சாளரான மொஹமட் அஸ்கர் களமிறங்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .