Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 17 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் மத்தியகள வீரரான ரொனால்டீனியோ கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். எவ்வாறெனினும், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு போட்டியிலும் ரொனால்டீனியோ விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான ரொனால்டீனியோ, 2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரேஸில் அணியில் இடம்பெற்றிருந்ததுடன், 2005ஆம் ஆண்டு பலூன் டோர் விருதை வென்றிருந்தார். இது தவிர, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்காக விளையாடியபோது 2006ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக்கையும் வென்றிருந்ததார்.
ரொனால்டீனியோவின் சகோதரரும் முகவர் றொபேர்ட்டோ அஸிஸுமே ரொனால்டீனியோ ஓய்வுபெற்றதை நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியிருந்தனர்.
ரொனால்டீனியோ, பார்சிலோனா தவிர, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் ஆகியவற்றுக்காகவும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
8 hours ago
16 Jul 2025