Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீரரான ஜஸ்டின் கட்லினின் பயிற்றுவிப்பாளரான டெனிஸ் மிற்செல், முகவரான றொபேர்ட் வக்னர் மீது ஊக்கமருந்துக்கெதிரான அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாறுவேடத்தில் சென்ற ஊடகவியலாளர்களுக்கு பெறுபேற்றை அதிகரிக்கும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை வழங்க றொபேர்ட் வக்னர் முன்வந்ததாகவும் தாங்கள் பயன்படுத்தும் ஊக்கமருந்துகள் சோதனைகளில் கண்டுபிடிக்கப்படாததால் தடகள வீரர்கள் தப்பித்துக் கொள்கின்றனர் என டெனிஸ் மிற்செல் தெரிவித்ததாகவும் டெய்லி டெலிகிராப் இணையத்தளம் செய்தி வெளியிட்டமையைத் தொடர்ந்தே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துப் பாவனையில் பங்கெடுத்ததை றொபேர்ட் வக்னரும் டெனிஸ் மிற்செலும் நிராகரித்துள்ளனர்.
விளையாட்டு தொடர்பான படமொன்றை தயாரிக்க விரும்பும் நிறுவனமொன்றின் பிரதிநிதிகளாகச் சென்ற ஊடகவியாலாளர்கள், தங்களது நடிகரை தடகள வீரரொருவர் போல மாற்றுவதற்கு பயிற்சியளிப்பதற்கான பயிற்றுவிப்பாளரொருவரைத் தேடுவதாகச் சென்றே குறித்த தகவல்களை பெற்றதாக டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியமை காரணமாக இரண்டு தடவைகள் தடைகளை அனுபவித்த 35 வயதான ஜஸ்டின் கட்லின், இவ்வாண்டு ஓகஸ்டில் இடம்பெற்ற தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் உலக சம்பியன்ஷிப்பில் உசைன் போல்டை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago