Lenin Raj / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

USA ஜூனியர் இன்டர்நேஷனல் கப்: உலகின் முன்னணி இளம் வீரர்களுடன் போட்டியிட்ட மன்மிதா, 'கடா' (Kata) பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், 'குமிதே' (Kumite) பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
USA ஓபன் சாம்பியன்ஷிப் 2026: இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மதிப்புமிக்க அமெரிக்க ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 'கடா' பிரிவில் மற்றொரு வெண்கலப் பதக்கத்தை வென்று தனது பதக்கப் பட்டியலை உயர்த்தினார்.
2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்க தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 'கடா' பிரிவில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றவர்.
இலங்கை தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளார்.
தனது கராத்தே பயணத்தை இலங்கையில் ஆரம்பித்த மன்மிதா, தனது 13-வது வயதில் உயர்கல்விக்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு சென்ற மூன்றே ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்று வியக்க வைத்துள்ளார்.
தற்போது இவர் மேரிலாந்தில் உள்ள செனெகா வேலி உயர்நிலைப் பள்ளியில் (Seneca Valley High School) மாணவியாகப் பயின்று வருகிறார்.
டெக்சாஸில் அவர் ஈட்டியுள்ள இந்த வெற்றி, வரும் காலங்களில் உலகத்தரம் வாய்ந்த போட்டிகளில் அவர் இன்னும் பல சாதனைகளைப் படைப்பார் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago