2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கெய்ல் விளையாடுவது சந்தேகம்

Editorial   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் நாளை மறுதினம் அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் சந்தேகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடும்போது களத்தடுப்பில் கிறிஸ் கெய்ல் களத்தடுப்பில் ஈடுபட்டிருக்காத நிலையில், குறித்த போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்றுவிப்பாளர் ஸ்டுவர்ட் லோ, கிறிஸ் கெய்ல் சுகவீனமுற்றுள்ளதாகக் கூறியிருந்ததுடன், கிறைஸ்ட்சேர்சுக்கு சென்ற பின்னர் மேலதிக மருத்துவ ஆலோசனையை கிறிஸ் கெய்ல் பெறவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X