Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூன் 17 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரில், பெலோ ஹொரிஸொன்டேயில் இன்று அதிகாலை இடம்பெற்ற குழு சி போட்டியொன்றில் ஈக்குவடோரை உருகுவே வீழ்த்தியது.
இப்போட்டியின் ஆறாவது நிமிடத்திலேயே, சக முன்களவீரரான லூயிஸ் சுவாரஸ் வழங்கிய பந்தை அபாரமாகக் கையாண்டு கோலாக்கிய உருகுவேயின் மத்தியகளவீரரான நிக்கலஸ் லொடெய்ரோ, தனதணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலையை வழங்கினார்.
பின்னர் போட்டியின் 24ஆவது நிமிடத்தில், நிக்கலஸ் லொடெய்ரோவின் முகத்தை தனது கையால் பதம் பார்த்த ஈக்குவடோரின் பின்களவீரரான ஜொஸே குயின்டரோவுக்கு முதலில் மஞ்சள் அட்டையே காட்டப்பெற்றபோதும், பின்னர் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்புடன் கலந்தாலோசித்து மஞ்சள் அட்டையை சிவப்பு அடையாயாக மாற்றிய மத்தியஸ்தர், அவரை களத்திலிருந்து வெளியேற்றினார்.
அந்தவகையில், இப்போட்டியின் குறிப்பிடத்தக்களவு பகுதியை 10 பேருடனே ஈக்குவடோர் விளையாடிய நிலையில், போட்டியின் 33ஆவது நிமிடத்தில் தமதணித்தலைவரும் பின்களவீரருமான டியகோ கொடின், ஈக்குவடோரின் பகுதியை நோக்கி தலையால் முட்டிய பந்தை, எம்பி தலைக்கு மேலால் உதைந்து கோலாக்கிய உருகுவேயின் முன்களவீரரான எடின்சன் கவானி, தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.
இந்நிலையில், முதற்பாதி முடிவடைய ஒரு நிமிடமிருக்கையில், சக பின்களவீரரான மார்டின் கஸரெஸிடமிருந்து பெற்ற பந்தை லூயிஸ் சுவாரஸ் கோலாக்கிய நிலையில், முதற்பாதி முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவே முன்னிலை வகித்தது.
பின்னர், போட்டியின் 78ஆவது நிமிடத்தில் ஈக்குவடோரின் பின்களவீரரான அர்துரோ மினா துரதிர்ஷ்டவசமாகப் பெற்ற ஓவ்ண் கோலோடு இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago