2025 ஜூலை 05, சனிக்கிழமை

கோப்பா அமெரிக்கா தொடர்: சிலியை வென்றது உருகுவே

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரில், மர்க்கானாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற நடப்புச் சம்பியன்கள் சிலியுடனான குழு சி போட்டியொன்றில் உருகுவே வென்றது.

இப்போட்டியின் 82ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய சக முன்களவீரரான ஜொனதன் றொட்றிகாஸ் வழங்கிய பந்தை உருகுவேயின் முன்களவீரரான எடின்சன் கவானி தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலமே 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற உருகுவே குழு சிய்யில் முதலிடம் பெற்றிருந்தது.

குறித்த போட்டியின் இரண்டாவது பாதியில் சிலியின் மத்தியகளவீரரான போலோ டயஸ் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டி பந்தைச் செலுத்தியபோது அவ்வணி கோலைப் பெறும் போலத் தோன்றியபோதும், கோல் கம்ப எல்லையில் வைத்து அதை உருகுவேயின் பின்களவீரர் ஜொஸே கிம்மென்ஸ் தடுத்திருந்தார்.

இதேவேளை, முதற்பாதியில் கோல் பெறும் சிறந்த வாய்ப்பை உருகுவேயின் முன்களவீரரான லுயிஸ் சுவாரஸ் கொண்டிருந்தபோதும், சிலியின் பின்களவீரர்களால் அடையாளப்படுத்தப்படாமலிருந்த தனது சக வீரர்களிடம் பந்தை வழங்காமல் தானே கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைந்திருந்த நிலையில், அப்பந்து கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.

இப்போட்டியில் பார்வையாளரொருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத் தாண்டி களத்துக்குள் நுழைந்திருந்த நிலையில் அவர் சிலியின் பின்களவீரர் கொன்ஸளோ ஜராவால் வீழ்த்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கை நேரப்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு இடம்பெறவுள்ள காலிறுதிப் போட்டியில் பெருவை உருகுவே எதிர்கொள்ளவுள்ளதுடன், குழு சியில் இரண்டாமிடம் பெற்ற சிலியானது, எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை 4.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் கொலம்பியாவை எதிர்கொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .