Shanmugan Murugavel / 2015 நவம்பர் 26 , மு.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடருக்கான போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி அணி தோல்வியைச் சந்தித்துள்ளதோடு, மன்செஸ்டர் யுனைட்டட் அணி, சமநிலையான முடிவைப் பெற்றுள்ளது.
ஜுவன்டஸ் அணிக்கும் மன்செஸ்டர் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், ஜுவன்டஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஜுவன்டஸ் சார்பாக, 18ஆவது நிமிடத்தில் மரியோ மன்ஸகிச், கோலைப் பெற்றார்.
இந்த வெற்றியையடுத்து, சம்பியன்ஸ் லீக்கில் நொக் அவுட் சுற்றுக்கு, மன்செஸ்டர் சிற்றி அணியோடு ஜுவன்டஸ் அணி இணைந்து கொண்டது.
மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் பி.எஸ்.வி எய்ட்டோவன் அணிக்குமிடையிலான போட்டி, கோல்கள் பெறப்படாத சமநிலையான முடிவைத் தந்தது.
இந்த முடிவையடுத்து, நொக் அவுட் சுற்றுத் தகுதிபெற வேண்டுமாயின், டிசெம்பர் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள வொள்ஸ்பேர்க் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தை, யுனைட்டட் அணி எதிர்கொண்டுள்ளது.
38 minute ago
46 minute ago
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
53 minute ago
59 minute ago