2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

சமநிலையில் அத்லெட்டிகோ – கலட்டசரே போட்டி

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 22 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரில், துருக்கியக் கழகமான கலடசரேயின் மைதானத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் சமப்படுத்தியது.

அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜல்லூயானோ சிமியோன் பெற்றதோடு, கலட்டசரே சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இதேவேளை தமது மைதானத்தில் இன்று நடைபெற்ற இன்னொரு லா லிகா கழகமான அத்லெட்டிகோ பில்பாவோவுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டா தோல்வியடைந்திருந்தது. அத்லாண்டா சார்பாக ஜனுலுக்கா ஸ்மக்கா, நிகொலா கிறஸ்டோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பில்பாவோ சார்பாக கொர்கா குருஸெடா, நிகொ செரானோ, றொபேர்ட் நவரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X