Shanmugan Murugavel / 2021 மார்ச் 21 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், கொலோனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை, 2-2 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் சமப்படுத்தியிருந்தது.
டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எர்லிங்க் ஹலான்ட் பெற்றிருந்ததோடு, கொலோன் சார்பாக, ஒன்ட்ரெஜ் டுடா, இஸ்மைல் ஜேக்கப்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
புண்டெஸ்லீகா புள்ளிகள் பட்டியலில், 61 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் பயேர்ண் மியூனிச் உள்ளது. 57 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கும், 51 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வொல்வ்ஸ்பேர்க்கும், 47 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஐன்ரச்ட் பிராங்பேர்ட் உள்ளது.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago