2024 மே 03, வெள்ளிக்கிழமை

சமநிலையில் டொட்டென்ஹாம் – எவெர்ற்றன் போட்டி

Mithuna   / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சமப்படுத்தியது.

டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் றிஷலிஷன் பெற்றதோடு, எவெர்ற்றன் சார்பாக ஜக் ஹரிஸன், ஜராட் பிறாத்வைட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 51 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 46 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாம், மூன்றாம், நான்காமிடங்களில் நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றியும், ஆர்சனலும், அஸ்டன் வில்லாவும் காணப்படுகின்றன. இதில் சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளதுடன் வில்லா ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .