Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநர்களில் ஒருவரான அநுர சமரநாயக்க மீது முன்வைக்கப்பட்டிருந்த போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர், இவ்வாண்டு பெப்ரவரியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இலங்கை அணியின் வீரர்கள் சிலரை, போட்டி நிர்ணயத்துக்குள் இட்டுச் செல்வதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டுக் காரணமாக, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும், அந்த விசாரணைகளின் போது, அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இருந்த போதிலும், இலங்கை கிரிக்கெட் சபையில் சமரநாயக்கவின் பங்கு, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும். இலங்கை கிரிக்கெட் சபையால் தனியாக நடத்தப்பட்ட வேறொரு விடயம் சம்பந்தமான ஒழுக்காற்று விசாரணைகளில், அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கிலுள்ள கிரிக்கெட் அக்கடமியில், விருந்தினர்களைக் கொண்டு சென்றார் என்ற விடயம் சம்பந்தமாகவே இந்த விசாரணை இடம்பெற்றிருந்தது. இதிலேயே அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராகவும் கிரிக்கெட் சபையின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராகவும் பதவி வகித்த சமரநாயக்க, லசித் மலிங்க, நுவான் குலசேகர உட்பட வேகப்பந்து வீச்சாளர்கள் பலரின் முன்னேற்றத்துக்குக் காரணமானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago