2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சம்பியனாக முடிசூடப்போவது லிவர்பூலா? டொட்டென்ஹாமா

Editorial   / 2019 ஜூன் 01 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய முதற்தர கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி, ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இப்போட்டியில், தத்தமது இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டிகளில் எதிர்பாரா மீள்வருகையை ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா, நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸுக்கெதிராக நிகழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான லிவர்பூலும், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் மோதுகின்றன.

சம்பியன்ஸ் லீக்கை ஒரு தடவை லிவர்பூல் கைப்பற்றிய நிலையில், இம்முறையே முதற்தடவையாக இறுதிப் போட்டிக்குள் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் நுழைந்துள்ளது. ஒருபக்கமாக கடந்த இரண்டாண்டுகளாக மேற்கொண்ட முதலீடுகளை தந்திரமான முகாமையாளரான லிவர்பூலின் ஜுர்ஜன் க்ளொப் அறுவடை செய்கையில், மறுபக்கமாக மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை பட்டை தீட்டி டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மூலோபாயமிக்க முகாமையாளரான மெளரிசியோ பொச்செட்டினோ சம்பியன்ஸ் லீக்கை குறி வைக்கிறார்.

இப்போட்டியானது சாடியோ மனே, றொபேர்ட்டோ ஃபெர்மினோ, மொஹமட் சாலா என்ற லிவர்பூலின் நட்சத்திர முன்களவீரர்கள் பட்டாளத்தை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸும், அவரின் பின்களவீரர்களும் சமாளிக்கப் போகின்றார்கள் என்பதிலும், வேர்ஜில் வான் டிஜிக் தலைமையிலான லிவர்பூலின் பின்களத்தை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் எவ்வாறு தாண்டிச் செல்கின்றது என்பதிலேயே சம்பியன்ஸ் லீக்கின் சம்பியன்கள் தீர்மானிக்கப்படப் போகின்றனர்.

அந்தவகையில், சம்பியன்ஸ் லீக்கை கைப்பற்றக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்ட அணியாக லிவர்பூலே மிளிருகின்ற நிலையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் நட்சத்திர முன்களவீரர் ஹரி கேன் முழு உடற்றகுதியையடைந்துள்ளதான செய்தி நிச்சயம் அவ்வணிக்கு இனிப்பானதாய் இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .