Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 14 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு சுப்பர் கிண்ணப் போட்டியில் பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
கடந்த பருவகால லீக் 1 சம்பியன்களுக்கும், பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான பிரெஞ்சு கிண்ணத் தொடரின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் குறித்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மர்ஸெய்யை இன்று அதிகாலை வென்றே பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனாகியிருந்தது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, மெளரோ இகார்டி, நெய்மர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மர்ஸெய் சார்பாகப் பெறப்பட்ட கோலை டிமித்ரி பயேட் பெற்றிருந்தார்.
கடந்த பருவகாலத்தில் லீக் 1 சம்பியன்களும், பிரெஞ்சுக் கிண்ணத் தொடர் சம்பியன்களும் பரிஸ் ஸா ஜெர்மைன் என்ற நிலையில், லீக் 1-இல் இரண்டாமிடத்தில் வந்த மர்ஸெய்யுடன் குறித்த போட்டியில் பரிஸ் ஸா ஜெர்மைன் மோதியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago