Shanmugan Murugavel / 2025 மே 08 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான அரையிறுதிப் போட்டியில் தோற்றே தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த ஆர்சனல், பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் வியாழக்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து 1-3 என்ற மொத்த கோல் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை புகாயோ ஸாகா பெற்றதோடு, பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக பேபியன் ருய்ஸ், அஷ்ரஃப் ஹகிமி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago