2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

சிநேகபூர்வப் போட்டியில் ஷாவும் முஷீரும் மோதல்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனேயில் தனது முன்னாள் மும்பை சகவீரரான முஷீர் கானுடன் தவிர்க்கக்கூடிய மோதலொன்றில் இந்தியாவின் பிறித்திவி ஷா செவ்வாய்க்கிழமை (07) பங்கெடுத்துள்ளார்.

மகாராஷ்ராவை தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் ஷா, மும்பைக்கெதிராக சதத்தைப் பூர்த்தி செய்த பின்னர் முஷீரை நோக்கி கோபமாகச் சென்று துடுப்பை உயர்த்தி முஷீரின் மேற்சட்டையைப் பிடித்துள்ளார்.

மும்பை, மகாராஷ்ராவுக்கிடையிலான மூன்று நாள் சிநேகபூர்வ போட்டியின் முதல் நாளில் கடுமையான வசைபாடலை ஷா எதிர்கொண்ட பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்கிய ஷா 220 பந்துகளில் 181 ஓட்டங்களைப் பெற்று முஷீரின் பந்தில் ஆட்டமிழந்த பின்னர் நன்றி என முஷீர் கூறிய பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் ஷாவை சமாதானப்படுத்தி மும்பை வீரர்களிடமிருந்து நடுவர் அப்பால் கொண்டு சென்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .