2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

சிம்பாப்வேயை வென்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 26 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் இலங்கை வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, றயான் பேர்ளின் ஆட்டமிழக்காத 37 (26), அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் 37 (29), பிரயன் பென்னிட்டின் 34 (26) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மகேஷ் தீக்‌ஷன 4-0-23-2, வனிது ஹசரங்க 4-0-23-2, துஷ்மந்த சமீர 4-0-26-0, அணித்தலைவர் தசுன் ஷானக 4-0-36-1, எஷான் மலிங்க 4-0-33-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 147 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காத 98 (58), குசல் மென்டிஸின் ஆட்டமிழக்காத 25 (25) ஓட்டங்களோடு 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ராசா 4-0-17-0, வெலிங்டன் மசகட்ஸா 3-0-19-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக நிஸங்க தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X