2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிற்றிக்குச் செல்கிறாரா ரொனால்டோ?

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றிக்குச் செல்ல இத்தாலியின் சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ முயல்வார் எனக் கூறப்படுகிறது.

ஜுவென்டஸுடன் இன்னும் ஓராண்டு ஒப்பந்தத்தை ரொனால்டோ கொண்டிருக்கின்றபோதும் அதைப் பூர்த்தி செய்ய விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சிற்றியிலுள்ள சக போர்த்துக்கல் வீரர்களான பெர்னார்டோ சில்வா, ருபென் டயஸ், ஜோவா கான்செலோவுடன் இது குறித்து ரொனால்டோ உரையாடியதாகக் கூறப்படுகிறது.

ரொனால்டோவின் ஊதியத்தைச் செலுத்த சிற்றி தயாராகவுள்ளபோதும், அவரை ஒப்பந்தம் செய்ய குறிப்பிடத்தக்க தொகை ஒன்றை ஜுவென்டஸுக்குச் செலுத்த சிற்றி தயாரில்லை எனக் கூறப்படுகிறது. அந்தவகையில் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்கையில் சில்வா அல்லது அய்மரிக் லபோர்ட்டோ ஜுவென்டஸுக்குச் செல்லும் வாய்ப்புக் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X