2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிற்றிக்குச் செல்கிறாரா றாமோஸ்?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 04 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் அணித்தலைவரான சேர்ஜியோ றாமோஸை இப்பருவகாலத்தில் கைச்சாத்திடும் நோக்கத்துடன் றியல் மட்ரிட்டில் அவரின் நிலையை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி அவதானிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்களவீரரான றாமோஸின் ஒப்பந்தமானது இவ்வாண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி முடிவடைகையில், அவர் இன்னும் தனது ஒப்பந்தத்தை நீடிக்கவில்லை என்பதுடன், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஏனைய கழகங்களுடன் பேரம்பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், தனது றியல் மட்ரிட் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதே றாமோஸின் பிரதான தெரிவாக இன்னும் உள்ளது எனக் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .